Department of Tamil

Overview

இளங்கலை வணிகவியல் துறை, கணினி அறிவியல் துறைகளுக்கு பொதுத் தமிழை விருப்ப மொழிப்பாடமாக வழங்குவதற்காக கல்லூரி தொடங்கும் போது 2000 ஆண்டு தமிழ் துறை தொடங்கப்பட்டது. B.Com, B.Com,CA, B.Com PA, BBA CA, B.Sc CS&HM B.Sc IT, B.Sc CS , B.Sc CSDA ஆகிய எட்டு துறைகளுக்கு விருப்ப மொழி பகுதி 1 தமிழ் பாடத்தை வழங்குகிறது. தமிழ் துறையின் ஆசிரியர்கள் அனைவரும் முனைவர் பட்டம் நிறைவு செய்தவர்கள், மாநாடுகளில் கட்டுரைகளை வழங்குதல், பத்திரிகைகளில் கட்டுரைகளை வெளியிடுதல் மற்றும் புத்தகங்களை எழுதுவதன் மூலம் தங்கள் அறிவைப் புதுப்பிக்கிறார்கள். கல்வி கற்பித்தலுடன், மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவருவதற்கான தொடர் பயிற்சிகள் பேச்சு, கவிதை எழுதுதல், கட்டுரை எழுதுதல் மற்றும் பிற இலக்கிய போட்டிகள் நடத்தப்படுகின்றன. வெகுஜன ஊடகங்களில் தமிழ் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாணவர்கள் ஊக்கப் படுத்தப் படுகிறார்கள்.

Vision

தமிழ் இலக்கிய மன்றத்தின் மூலம் மனித நேயத்தை வளர்க்கும் தொடர் நிகழ்வுகள் நடைபெறுகிறது. தமிழ் இலக்கியங்களில் உள்ள அறக்கருத்துக்கள் மூலம் நல்ல குடிமக்களை உருவாக்கும் முயற்சியில் தமிழ் இலக்கிய மன்றம் ஈடுபட்டு வருகிறது.

Mission

மாணவர்களின் பரந்துபட்ட அறிவை மேம்படுத்த தூண்டுகோலாக தமிழ் இலக்கிய மன்றம் செயல்படுகிறது. பல்வேறு இலக்கிய போட்டிகள் மூலம் மாணவர்களின் திறமைகளை வெளி உலகிற்கு அடையாளப்பபடுத்துவது. மாணவர்களின் தலைமைப் பண்பு, ஆளுமைத் திறன்களை வளர்த்தல்.

Dr.R.SATHEESHMOHAN

Associate Professor & HOD

Dr.R.SATHEESHMOHAN

M.A.,M.Phil.,Ph.D., UGC-NET.

Email : satheeshmohanr@sankara.ac.in

Exp: Teaching: 12 Years

Profile

Dr.A.INDUMATHI

Associate Professor

Dr.A.INDUMATHI

M.A., B.Ed., M.Phil., Ph.D.

Email : indumathia@sankara.ac.in

Exp: Teaching: 12 Years

Profile

Dr.P.SASIKALA

Assistant Profesor

Dr.P.SASIKALA

MA., B.Ed., M.Phil., Ph.D., CDM.

Email : sasikalap@sankara.ac.in

Exp: Teaching: 07 Years

Profile

Outcome Based Education Curriculum

Programme Educational Objectives

  • PEO1 : இலக்கிய வளர்ச்சியை அறிந்து கொள்ளுதல்
  • PEO2 : தமிழ் இலக்கிய வரலாற்றினைக் கால வரிசைப்படி அறிதல்
  • PEO3 : மொழிபெயர்ப்பின் அவசியம் அறிதல்
  • PEO4 : மொழி வளர்ச்சிக்கு இலக்கணத்தின் பயன் அறிதல்
  • PEO5 : பேச்சுத்திறனை மேம்படுத்துதல்
  • PEO6 : தன்னம்பிக்கை மற்றும் அறப்பண்புகளை வளர்த்தல்
  • PEO7 : படைப்பாற்றல் திறனை மேம்படுதல்
  • PEO8 : பண்பாட்டுக் கல்வியினை அளித்தல்
  • PEO9 : வரலாற்று செய்திகளை நினைவூட்டல்
  • PEO10 : படிக்கும் ஆர்வத்தினைத் தூண்டுதல்

Programme Outcomes

  • PO1 : புதுக்கவிதையின் மூலம் வாழ்வியல் விழுமியங்களை உணர்த்துதல்
  • PO2 : மாணவர்களின் வாசிப்புத் திறனையும் படைப்புத்திறனையும் மேம்படுத்தி சமூகப்பிரச்சினைகளை அறிய வைத்தல்
  • PO3 : மொழியைப் பிழையின்றி பேச, எழுத, கற்கத் தேவையான தமிழ் இலக்கணத்தின் இன்றியமையாமையை உணர்த்துதல்
  • PO4 : பாடப்பகுதியிலுள்ள இலக்கிய வரலாற்றினை அறிதல் மூலம் இலக்கியப் (செய்யுள்) பகுதியின் பின்னணியை அறிதல்.
    தமிழ்ப்பாடம் வழி அரசுத்தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிகாட்டுதல்
  • PO5 : நடைமுறை வாழ்வியலுக்குத் தேவைப்படும் ஆங்கிலக்கடிதத்தைத் தமிழாக்கம் செய்தலுக்கான பயிற்சியளித்தல்

தமிழ் துறையின் சிறப்புகள்

துறையின் சிறப்புகள்

  • பேராசிரியர்கள் பத்து ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் உடையவர்கள்
  • பல பன்னாட்டுக் கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகளை நடத்தியிருக்கிறது
  • கால மாற்றத்திற்கு ஏற்ப இணையக் கல்வியிலும் தமிழ்த்துறை
    தடம் பதித்து வருகிறது
  • தமிழ் துறை பேராசிரியர்கள் நமது கல்விப் பணிக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளனர்
  • சிறப்புமிக்க பண்பாட்டு கலாச்சார விழாக்களை தொடர்ந்து நடத்தி வருகிறது

துறையின் சிறப்புகள்

  • பாரதி விழா, கம்பன் விழா தமிழ் இலக்கிய மன்ற விழா போன்ற விழாக்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது
  • மாணவர்களின் தனித்திறமைகளை உலகறியச் செய்ய களம்
    அமைத்து தருகிறது
  • மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்கும், ஆளுமைத் திறனை வளர்ப்பதற்கு வாய்ப்புகள் வழங்கப்படுகிறது
  • பல்கலைகழக அளவில் பல மாணவர்கள் பல விருதுகளைப் பெற்றுள்ளனர்
  • சிறந்த தமிழறிஞர்களின் உரை மூலம் அவர்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள விழாக்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது

தமிழ் இலக்கிய மன்றம்

தமிழ் இலக்கிய மன்றம், தமிழ் இலக்கியத்தில் மாணவர்களின் அறிவை வளப்படுத்த கருத்தரங்குகள், பயிலரங்குகள் மற்றும் மாநாடுகளை இத்துறை தொடர்ந்து நடத்தி வருகிறது. மாணவர்களின் பல்வேறு திறன்களை மேம்படுத்துவதற்காக அனைத்து துறைகளுக்கும் இடையேயான மற்றும் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள் நடத்தப்படுகின்றன. 2018 மே 19, 29 தமிழ் துறை வளர்தமிழ் ஆய்வு மன்றத்துடன் இணைந்து பன்னாட்டு கருத்தரங்கு நடைபெற்றது. 2018 டிசம்பர் 8 அன்று தமிழ் இலக்கியங்கள் பன்முக நோக்கு என்ற தலைப்பில் மலாயாப் பல்கலைகழகம் மலேசியா, விஜயா பதிப்பகம் கோவை ஆகியவற்றுடன் இணைந்து பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. 2020 மே 20 முதல் 23 வரை நான்கு நாட்கள் ‘இணையத் தமிழ் கற்பித்தலில் திறன் மேம்பாட்டு இணையவழி பன்னாட்டுப் பயிலரங்கம்’ என்ற தலைப்பில் கல்லூரி பேராசிரியர்களுக்கான பயிற்சி பட்டறை நடைபெற்றது. 2020 ஜூன் 11 அன்று அயலகத் தமிழர் வாழ்வியல் என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.

Copyright © 2021 Sankara College of Science and Commerce. All rights reserved.

Website Maintained By : Department of M.Sc CS

Free WordPress Themes, Free Android Games